காயத்ரி ரகுராம்: மோடி பொய்களாலும், மோடி ஆட்சியாலும் மக்கள் சோர்வடைந்துள்ளனர்…! சதவீதம் வெகு தொலைவில் இல்லை…!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. அதோபோல தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் நவம்பர் 30 தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவம்பர் 7, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தனது நடிகை காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில், 329/638 பாஜக வெற்றி பெற்றது. 309/638 மற்றவர்கள். சதவீதம் வெகு தொலைவில் இல்லை. 2024க்கான காங்கிரஸுக்கு இது எளிதான இலக்கு. 49% பேர் மோடியையும் பாஜகவையும் எளிமையாக விரும்பவில்லை.

மேலும் அண்ணாமலை தெலுங்கானாவில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நட்சத்திர பிரச்சாரகர் அண்ணாமலையை காங்கிரஸ் தவறவிட்டது. தென்னிந்தியா பாஜக மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. பாஜக தெற்கில் நுழைய முடியாது. அவர்கள் வடக்கையும் தெற்கையும் பிரித்துள்ளனர். தெற்கில் வளர்ச்சி இல்லை. தெற்கில் வளர்ச்சி இல்லை. தமிழகத்தில் பாஜக வளர்ச்சி 0, அண்ணாமலையின் பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அனைத்தும் ஒளியியல் மட்டுமே. ஒளியியல் வேலை செய்யாது கண்ணா.

2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டிற்கும் இன்னும் பந்தயம் என்று என்னால் சொல்ல முடியும். இது வெற்றிகரமான வெற்றியாக இருக்காது. இது ஆரோக்கியமானது. மோடி பொய்களாலும், மோடி ஆட்சியாலும் மக்கள் சோர்வடைந்துள்ளனர். 5 மாநிலத் தேர்தலும் பாஜகவுக்கு வெற்றியல்ல. 2024 ராகுல் காலம். ராகுல் கலாம் இந்தியாவுக்காக பணியாற்றுகிறார் என தெரிவித்துள்ளார்.