ஆட்டிப்படைக்கும் திராவிடத்தின் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும். நோயாளி இறந்த பிறகு அதற்கான மருந்து கண்டுபிடித்து பயன் இருக்காது என நடிகை கஸ்தூரி தெரிவித்தார். கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று இரவு அந்தணர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, புரட்சித் தமிழகம் கட்சியை சார்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் பல்லாண்டு காலமாகவே, பிராமணர்களை இழிவுபடுத்துவதும், அச்சுறுத்துவதும், சாதியை குறிப்பிட்டு பேசுவதும் தொடர்ந்து வருகிறது. ஆட்டிப்படைக்கும் திராவிடத்தின் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும். நோயாளி இறந்த பிறகு அதற்கான மருந்து கண்டுபிடித்து பயன் இருக்காது” என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.