கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாய்

கள்ளக்காதலை கைவிடுமாறு கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்மார்ட் போன்கள் என்று மக்கள் கைகளில் வரத்தொடங்கியதோ, அன்றே சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள் என பலர், காம வலைகளில் சிக்கி, தங்கள் குடும்ப வாழ்க்கையை சீரழித்து கொண்டுள்ளனர்.

இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளையும் பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்லும் சம்பவமும், கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொல்லும் சம்பவமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி ஊராட்சி துக்கியம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயகுமாருக்கும், இளவரசிக்கும் விக்னேஸ்வரன், சதீஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. யை சேர்ந்த விஜயகுமார். விஜயகுமாரரின் வீட்டின் அருகே செப்டிக் டேங்கில் குழந்தைகள் இருவரும் தவறி விழுந்து விட்டதாக கூறி இளவரசி அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று, செப்டிக் டேங்கில் விழுந்து கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இளவரசி தகாத உறவு விவகாரத்தில், தன்னுடைய 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்து விட்டதாக, விஜயகுமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, இளவரசியை பிடித்து வாழப்பாடி காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து இளவரசி அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்தது. இதையறிந்த எனது கணவர் விஜயகுமார், தகாத உறவை கைவிடும்படி கூறி என்னை கண்டித்தார். இதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது, என்னை கொல்லாமல் விட மாட்டேன் என கூறி விட்டு, கணவர் வெளியே சென்று விட்டார். இதனால் நான் ஆத்திரம் அடைந்து குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். பின்னர், வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில், 2 குழந்தைகளையும் வீசினேன். பின்னர், நானும் டேங்கின் உள்ளே குதிக்க முயன்றேன். திடீரென பயத்தில் அலறினேன். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து என்னையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால், அதற்குள் குழந்தைகள் உயிரிழந்து விட்டனர் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.