கரூர் நகரில் வீட்டு உபயோகத்திற்கான தலையணை உறை, திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், மெத்தை விரிப்பு, கையுறைகள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட கூடிய துண்டுகள், சமையலர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை கரூரில் இருந்து தமிழகம் முழுவதும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பபட்டு வருகின்றன.
கடந்த 23 -ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இன்றைய தொழில்துறை மானிய கோரிக்கையின் போது, கரூர் மக்களின் நீண்டகால கனவான ஜவுளி பூங்கா அமைய அறிவிப்பு வெளியிட்டது
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அதிகப்படுத்த, சிப்காட் மூலம், 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான ஜவுளி பூங்காவை, ஜவுளி பதனம் செய்யும் பிரிவு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பிரிவு, வீட்டு ஜவுளி உற்பத்திப் பிரிவு, உலகத்தரம் வாய்ந்த பரிசோதனை கூடம், கண்காட்சி கூடம், உற்பத்தி மேம்பாட்டு மையம், ஜவுளி வடிவமைப்பு மையம், பிரத்யேகமான திறன் மேம்பாட்டு மையம் போன்ற சிறப்பு அம்சங்களுடன் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.