செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ரஞ்சித் என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் அடைய செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வழக்கு பதிவு செய்தார்.
17 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கியதாக ரஞ்சித்தை காவல்துறை கைது செய்தனர். அதேபோல் தனியார் மற்றும் அரசு மருத்துவர்களிடம் சென்று அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக காவல்துறையிடம் அந்த சிறுமியின் தாய் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஞ்சித் மீது போக்கோ வழக்கினை பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்யதாக கூறப்படும் அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யதாக 2 லட்சம் பணமும் என 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வாங்கியதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆய்வாளர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.