நாட்டின் 75-வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் கடந்த 22-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடல் சங்கமம் பகுதியில் தொடங்கி திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலத்தை அடையும் இந்தப் பேரணியை ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்தப் பேரணி ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும் பேரணிக் குழுவினர் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் உள்ள ராஜ்கோட் பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர். நேற்று மாலை தருமபுரி வந்து சேர்ந்த இந்தப் பேரணிக் குழுவினருக்கு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், மேள, தாளங்களுடன் வரவேற்பு அளித்தார்.