கந்துவட்டி கொடுமை… பெண்ணை தனியறையில் அடைத்து வைத்து சித்தரவதை..!

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த மதியழகன். இவரது மனைவி மாலதி. விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி உமாராணி என்பவரிடம், மாலதி 6 லட்ச ரூபாய் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், உமாராணி தனது வீட்டில் உள்ள தனி அறையில் கடந்த 2 மாத காலமாக மாலதியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து உமாராணியின் வீட்டிற்கு விரைந்து சென்ற காவல்துறை, தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாலதியைப் பத்திரமாக மீட்டனர். அப்போது பதட்டமான நிலையில் இருந்த மாலதி கண்ணீர் மல்க காவல்துறையினரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்த காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.