ஐஏஎஸ் தேர்வில் தன் மகனை சாதிக்க வைத்த தாய்… இந்தியாவின் முதல் ஐஏஎஸ்

கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை அமிர்தவள்ளியின் கணவர் ஆவினில் நிறுவனத்தில் பணி. இரண்டு ஆண் குழந்தைகள் அவர்களில் ஒருவர் ரஞ்சித் குமார். பிறந்து 7 மாதத்தில் வாய் பேச முடியாத செவித்திறனற்ற குழந்தை என அறிந்த பெற்றோர்கள்  அதிர்ந்து போயினர். தன குழந்தையின் எதிர்காலத்திற்காக பள்ளி ஆசிரியரான அமிர்தவள்ளி செவித் திறன் பேசும் திறன் அற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படிப்பை பயின்று அதில் பி.எட் பட்டம் பெற்று அது சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இணைந்தார்.

அமிர்தவள்ளி காது கேளாதோர், பேச முடியாத ஒரு பள்ளியில் ஆசிரியராக இணைந்தது மட்டுமின்றி தான் வேலை செய்த பள்ளியில் தன மகன் ரஞ்சித் குமார் சேர்த்தார். ரஞ்சித் குமார் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்தது மட்டுமின்றி 12 ஆம் வகுப்பு பொது தேர்விலும் மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்தார். அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பை முடித்து சமூகத்தின் மிகச் சிறந்த ஒரு மாணவனாக உயர்ந்தார்.

நம் ஒவ்வொரு இளம் தலைமுறையினருக்கும் மிகப் பெரிய கனவாக உள்ள தேர்வு சிவில் தேர்வு. இந்தியாவில் பல இளைஞர்களும் பட்டதாரிகளும் மிகவும் முயற்சி செய்து படிக்கும் ஒரு தேர்வு சிவில் தேர்வு. சிவில் தேர்வில் வெல்ல சிறந்த பயிற்சி பெற வேண்டும் அதன்பின்னர் முதல்நிலை தேர்வு அதை அடுத்து முதன்மை தேர்வு அதன் பின்னர் நேர்முகத் தேர்வு என பல கட்டங்களாக கடந்து வெற்றி பெற்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற ஏதாவது ஒரு ஆட்சி பதவி.

சிவில் தேர்வு எழுத பல இளைஞர்களுக்கு ஆசை இருந்தும், ஆர்வம் இருந்தும் பங்கேற்கும் இளைஞர்கள் சிவில் தேர்வு எழுதி மேலும் கடினமான முயற்சிகளை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கி விடுகின்றனர். ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து முதல் நிலைத் தேர்வில் 5 லட்சத்திற்கும் குறைவானவர்களே எழுதி அதில் வெறும் ஆயிரக்கணக்கிலேயே தேர்ச்சி பெறுகின்றனர். அதில் நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களின் ஆண்டுதோறும் 900-க்கும் குறைவான ஆட்சிப்பணி பணி அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

ரஞ்சித் குமார் தாய் அமிர்தவள்ளி சிறுவயது முதலே மிகுந்த அறிவாற்றலுடன் இருந்த  தன்னுடைய மகனின்  கடின உழைப்பால், முதல்நிலை, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்பவர்களின் உதட்டசைவை வைத்து கேள்வியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நிலையில் தன மகன் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை உருவாக்கினார். நேர்முகத் தேர்வில் கேள்வி எழுப்பியவர்கள் உதட்டசைவை புரிந்துகொண்டு தனது பதிலை பேப்பரில் எழுதி கொடுத்து சிவில் தேர்வில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்.

ஒரு பள்ளி ஆசிரியராக இருந்த அமிர்தவள்ளி தன் மகனின் எதிர் காலத்திற்காக செவித் திறன் பேசும் திறன் அற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படிப்பை பயின்று அதில் பி.எட் பட்டம் பெற்று அது சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இணைந்து இன்று தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றது மட்டுமின்றி சிவில் தேர்வில் தனது மகன் ரஞ்சித் குமார் வெற்றி பெற்றிருக்கிறார். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு உதாரணமாக தன்னுடைய பிரச்சனையை மீறி சிவில் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர் ரஞ்சித்குமாரின் முயற்சி.