என் காதல் உங்கள் கைகளில..! 500 ரூபாய் வைத்து “டீ குடித்துக் கொள்ளுங்கள்..! எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்க..!

“தயவு செய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலை தொடர முடியும்” எனக் கோரிக்கை வைத்தும், 500 ரூபாய் தாளை விடைத்தாளில் வைத்து “டீ குடித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்” போன்ற சிலரின் செயல்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கர்நாடகாவில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநில மாணவர்கள் சிலரின் செயல்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திலுள்ள சிகோடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திக் கொண்டிருந்த ஆசிரியருக்கு டீ செலவுக்கு வச்சுக்கோங்க.. பாஸ் பண்ணி விடுங்க என கேட்டுள்ளார். ஒரு மாணவர் தனது காதலை இணைத்து கோரிக்கை வைத்து இருக்கிறார். “தயவு செய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலை தொடர முடியும்” எனக் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இன்னொரு மாணவர், 500 ரூபாய் தாளை விடைத்தாளில் வைத்து “டீ குடித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்” என கோரிக்கை விடுத்திருக்கிறார். மற்றொருவரோ “நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைத்தால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்” என்றும், இன்னொரு மாணவர் “நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால் என் பெற்றோர் என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டார்கள். என்னுடைய எதிர்காலம் இந்த தேர்ச்சியில் தான் உள்ளது” என கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் விடைத்தாள்களும் அவர்களது கோரிக்கையும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது