அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது இலந்தைகூடம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பொது கழிவறை ஒன்று கட்டப்பட்டது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் காரணத்தால் அந்த கழிவறை செயல்படாமலேயே இருந்து வருகிறது. இதனால், வீட்டில் கழிவறை வசதி இல்லாத பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை திறந்தவெளி கழிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது கழிவறையின் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இதனால், இயற்கை உபாதையை கழிக்க எங்கு செல்வது என்று தவித்த பெண்கள் கழிவறையை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்ததோடு, நேற்று மாலை ஊராட்சி மன்ற தலைவரை அனுகி முறையிட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றம் அடைந்த அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.