உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களுடன் பிரியங்கா காந்தி ஆறுதல்

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், லலித்பூர் பகுதியில் உரம் வாங்க வரிசையில் நின்றபோது 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்களின் உறவினர்களை பிரியங்கா காந்தி இன்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.