கேரள மாநிலம் கோட்டயம் அருகேயுள்ள கருக்காச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.அந்த மனுவில் தனது கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி இருந்தார். அந்த பெண்ணின் கணவரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சியை ஏற்படும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சிலர் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் திருமணமானவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட ரகசிய குழுக்கள் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ரகசிய குறியீடுகள் அளிக்கப்படும் அந்த குறியீடுகள் மூலம் குழுக்களில் உள்ள மற்றவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ள முடியும்.
பின்னர் இக்குழுக்களில் உள்ளவர்கள் நேரில் சந்தித்து பேசவும், பழகவும் குழுக்கள் ஏற்பாடு செய்யும். அப்போது அவர்கள் தங்களின் மனைவியரை ஓட்டலிலோ அல்லது ரிசார்ட்டுக்களிலோ அல்லது உறுப்பினர்களின் வீடுகளிலேயே இந்த விழாக்கள் நடத்தி மனைவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு உல்லாசமாக இருக்கலாம். இதற்கு குறிப்பிட்ட தொகையை குழுக்கள் வசூலித்து கொள்ளும்.
இதற்காக குறிப்பிட்ட நாளில் உறுப்பினரின் வீட்டிற்கு குழுவினர் ஜோடி, ஜோடியாக செல்வார்கள். அங்கு நாள் முழுக்க கொண்டாட்டம் நடைபெறும். மது விருந்துடன் நள்ளிரவு வரை நீடிக்கும். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஜோடிகளை மாற்றி உல்லாசமாக இருப்பார்கள் என்ற தகவல்கள் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்போரில் சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விட்டதில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற வலைத்தளங்களில் 14 குழுக்கள் செயல்பட்டது தெரிய வந்தது.
இதில் 750 ஜோடிகள் என 1,500 பேர் உறுப்பினராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கைதான பெண்ணின் கணவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பேர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் நிகழ்ச்சி நடந்த இடங்களில் மது விருந்தும் நடந்ததாக கூறப்பட்டது.
அதில் போதை பொருட்கள் பரிமாற்றம் நடந்ததா? இந்த குழுக்களை தொடங்கியதில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் கைதானவர்களை காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.