இந்தியாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ஆம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற.முதியவர் ஹம்சா இங்கேயே இறக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ஆம் பிற்பகல் 3 மணி அளவில் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும், வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த 79 வயதான ஹம்சா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு காவல்துறை தெரிவித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த ஹம்சா, நான் பிறந்த இடம் இது தான். இங்கேயே என் இறுதி மூச்சை விட விரும்புகிறேன் என தெரிவித்தார். கேரளாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ஆம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கராச்சியில் தனது சகோதரருடன் கடை நடத்திய அவர், 1972-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போருக்கு பிறகு இந்தியா திரும்ப, பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றாராம். 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார். இவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அது வழங்கப்படவில்லை. அவரது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி ஹம்சா கேரளாவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.