இணையத்தில் வைரலாகும் பள்ளி முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே குடுமிபிடி சண்டை!

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏக்லவ்யா ஆதர்ஷ் பள்ளிகள் (Eklavya Adarsh Residential Schools) பெண் நூலகருக்கும் பெண் முதல்வருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்ட அந்த வாய் தகராறை பெண் நூலகர் தனது மொபைல் போனில் மோதலை படம்பிடிக்கத் தொடங்குகிறார், இதனால் ஆத்திரம் அடைந்த பெண் முதல்வர் நூலகரை அறைந்து, தொலைபேசியைப் பிடுங்கி, தரையில் வீசுகிறார். இதனால் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் கடைசியில் கடுமையான சண்டையில் முடிகிறது

பெண் முதல்வரிடம் “மேடம், உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என்னை எப்படி அறைய முடியும்?” மேலும் சேதமடைந்த தொலைபேசியைப் பற்றி நூலகர் கேட்கிறார். பின்னர் பெண் முதல்வர் அந்த மொபைல் போனை எடுத்து மீண்டும் எறிந்து, அதை மேலும் உடைக்கிறார். பள்ளி முதல்வரின் செயலை கண்டு அதிர்ந்த பெண் நூலகர் “என் தொலைபேசியை எப்படி நீங்கள் உடைத்தீர்கள் மேலும் என்னை அறைய உனக்கு எவ்வளவு தைரியம்?” என கேள்வி கேட்டு கொண்டே பதிலுக்கு, நூலகர் முதல்வரின் கையில் அறைந்தார்.

இதனால் மேலும் கோபமடைந்த பெண் முதல்வர் நுலகரை தாக்க நூலகரும் முதல்வரை தக்க “என்னைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்?” நூலகர் கத்துகிறார். இருவரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகின்றனர். இந்த பின்னணியில் ஒரு குழந்தை “அம்மா, விட்டுவிடு” என்று கெஞ்சுகிறார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.