கோயம்புத்தூர் ஆனைமலை அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் ஆனைமலை, கோட்டூர், மணக்கடவு, அம்பராம்பாளையம் வழியாக கேரளாவை சென்றடைகிறது. இதில் ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனைமலை ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இந்நிலையில் ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக உப்பாறும், ஆழியாரும் ஒன்று சேரும் இடத்தில் தினசரி 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது.
இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த தண்ணிரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையமும் பயன்பாட்டில் இல்லை. இதனால் கழிவுநீர் நீர் நேரிடையாகவே ஆற்றில் கலக்கிறது. எனவே அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.