சென்னை ராயபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்த பெண் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் கிண்டியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் ஸ்பை கேமரா இருப்பதை பார்த்து அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பெண்ணின் கணவன் வீட்டில் இருந்த ஸ்பை கேமராவை எடுத்து பரிசோதனை செய்த போது மனைவி உடை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, ஸ்பை கேமராவுடன் ராயபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டின் உரிமையாளர் அப்துல் சமத்தின் மகன் இப்ராஹிம் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்திய, பின்னர் இப்ராஹிமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.