+ 2 மாணவி ஆடையில்லாமல் வீடியோ காலில் இருந்த வைத்து மிரட்டிய இன்ஸ்டாகிராம் காதலன் நண்பனுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் செல்போனுடன் தூங்கி செல்போனில் கண்விழிக்கும் நிலைக்கு நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி நம்மை அழைத்து சென்றுள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் அதிகமான காரணத்தால் முன்பின் தெரியாத நபர்களிடம் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்த கதைகள் தொடர் கதைகளாக தொடர்ந்து கொண்டே உள்ளது.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி மகள் மல்லூர் அருகேயுள்ள உறவினர் வீட்டில் தங்கி மல்லூரிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிஷோர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தினமும் இன்ஸ்டாகிராம் கடலை போட்டுள்ளார். இந்த கடலைக்கு நடுவே கிஷோர் மாணவியிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இத்தனை உண்மை என்று மாணவி நம்பி காதலித்து உள்ளனர். ருநாள் வீடியோ காலில் உடைகள் இன்றி வரவேண்டும் என்றதும் முதலில் மாணவி மறுக்க நாம் காதலர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என பேசி மாணவியை உடைகள் இன்றி வீடியோ காலில் கிஷோர் வர வைத்துள்ளான். அப்போது அதனை பதிவு செய்து வைத்துள்ளான். இந்நிலையில் நண்பன் முகமது அலியுடன் சேலம் வந்த கிஷோர் மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளான். அதற்கு மாணவி மறுத்த நிலையில் ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதையடுத்து அந்த மாணவி தனது தந்தையிடம் நடந்ததை கூற அழுதுள்ளார்.
விவசாயி தனது மகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இந்த எண்ணான 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்து இருக்கிறார். என்னுடைய மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டுவதாகவும், அவரை தனிமையில் இருக்க வேண்டும் என அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த தகவல் உள்ளூர் காவல்துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் சிறுமி தங்கி இருந்த வீட்டை சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சுற்றித்திரிந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த லேப் டெக்னீசியன் கிஷோர் என்பதும், மற்றொருவர் எருக்கஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த மெக்கானிக் முகமது அலி என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்வாண வீடியோக்களை வைத்து மாணவியை மிரட்டியதை ஒப்பு கொண்டுள்ளனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை இருவரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.