மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசாவில் 31 பேர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த பெண்களை மருத்துவர் கற்பழித்த அவலம் தற்போது வௌிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஸ்ரீராம் சந்திர பஞ்சா மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தன் தாயார் மற்றும் அத்தையை இதயநோய் சிகிச்சைக்காக கடந்த ஞாயிற்றுகிழமை அழைத்து சென்றுள்ளார். அப்போது எக்கோகார்டியோகிராம் பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவர் டில்பாசிங் தாக்கூர், இரண்டு பெண்களையும் தனித்தனியாக வரும் படி கூறியுள்ளார். பரிசோதனை முடிந்து வௌியே வந்த இரு பெண்களும் தங்கள் அடிவயிறு வலிப்பதாக கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த பெண்களின் உறவினர்கள் இருவரையும் அதே மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு பெண்களையும் மருத்துவர் டில்பாசிங் தாக்கூர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு டில்பாசிங் தாக்கூரை சரமாரியாக தாக்கினர். மருத்துவர் டில்பாசிங் தாக்கூரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.