உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு 2.7 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் தான் திறப்பு விழாவையொட்டி களிமண்ணில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை வடிக்கும் சிற்பிகளான மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகியோர் அயோத்தி கோவில் வளாகத்தில் நிறுவப்பட உள்ள ராமர் சிலைகளை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.