நூற்றாண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்காடப்பட்ட ஸ்ரீ ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் மற்றும் முஸ்லிம்களுக்கு தனியாக மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கவும் நவம்பர் 19-ம் தேதி 2019 ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. இதன்படி கட்டப்படும் ராமர் கோயில் அடுத்த வருடம் ஜனவரி 22-ல் திறக்கப்பட உள்ளது.
இதுபோல் பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் உத்தரப் பிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி வளாகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தனிப்பூர் கிராமத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது.
இங்கு கட்டப்படும் மசூதிக்கு முகம்மது பின் அப்துல்லா மசூதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்களின் புனிதத்தலமான மக்காவிலுள்ள காபாவின் மசூதியில் தொழுகைக்குதலைமை ஏற்கும் மஸ்ஜித்-எ-ஹரம் அடிக்கல் நாட்டினார்.