அந்தர் பல்டி அடித்த சீமான்…! நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா.. !?

நடிகை விஜயலட்சுமியை பண்ணை வீட்டில் தங்க வைத்து, விஜயலட்சுமிக்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வீரலட்சுமி நின்றார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. என் வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை சீமான் காட்டமாக விமர்சித்தார்.

இந்நிலையில் வீரலட்சுமியின் கணவர் பூவை. கணேசன், சீமானை அண்ணே! நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? “அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக சீமான் அளித்த பேட்டியில், பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்.. 7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்கிக்கு கூப்பிடுறாரு.. நான் பேசி அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது.

நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. ” என்றார்.

இந்நிலையில்,சீமான் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக வீரலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஊடகவியலாளர் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழுங்கினமான பேச்சு, பேசிக்கொண்டு இருந்தீர்கள். நீங்க பேசும் பேச்சை எல்லாம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்ணாக தலைவராக நான் வேண்டும் என்றால் இதை கடந்து போய்விடலாம். ஆனால், நீங்கள் என்னை பேசிய பேச்சை கேட்டுவிட்டும் கடந்து போக வேண்டிய அவசியம் என் கணவருக்கு கிடையாது.

அதனால், உங்களை தொடர்பு கொண்டு நான் வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன் பேசுகிறேன் என்றதும் நீங்கள் அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் உங்களை தொடர்பு கொண்டார். அப்போது உங்கள் கூட பாக்சிங் பண்ண ஆசையாக இருக்கு.. ஒண்டிக்கு ஒண்டி நிற்கலாமா என பேசினார். அதைக் கேட்டுட்டு போனில் பேசுவதற்கு உங்களுக்கு வீரம் இல்லை. ஊடகங்கள் முன்னாடி மைக்கிற்கு முன்னாடிதான் உங்களுக்கு வீரம் வருமா? போனை கட் பண்ணிட்டு.. ஊடகங்களிடம் முதலில் அவரை எதிரில் வந்து நிற்க சொல்லுங்க என சொன்னீர்கள்.

நான் நிற்கிற இடம் என்னவென்று தெரியுதா.. இங்க தான் என் கணவருடன் பாக்சிங்.. சண்டை போடவேண்டிய கிரவுண்ட் இடம் இது… இந்த கிரவுண்ட் எங்கேஇருக்கிறது என்றல் திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் இது.. இந்த இடத்தில் தான் பாக்சிங் போடுவதற்கான இடத்தை நாங்கள் தீர்மானம் பண்ணியிருக்கிறோம். தேதி எப்போ பார்த்தீங்கள் என்றால் 2024 தை மாதம் காணும்பொங்கல்.

அன்னைக்குதான் உங்களுக்கும் எனது கணவருக்கும் சண்டை நடக்க போகிறது.. இந்த சண்டையில் பாக்சிங் கராத்தே, மல்யுத்தம், குங்பூ இதில் எந்த சண்டை வேண்டும் என்றாலும் நீங்க போடுங்க… எல்லாவற்றையும் சமாளிக்க தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யாரு நாக் அவுட் ஆகி தோற்கீறிங்களோ அவர்கள் தோற்றதை ஒத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் என்ன பந்தயம் என்பதை போட்டி நடப்பதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு நான் அறிவிப்பேன். இவ்வாறு வீரலட்சுமி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், இன்று இவ்விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான், எல்லாரும் என்னிடம் அறிவுறுத்தியிருக்கிறது என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் வாயை மூடிக்கொண்டு போ என்கிறார்கள்.. பெரியவர்களாகிய நீங்க கேட்பதால் சொல்கிறேன்.. நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் சண்டையிட போகுமா இல்லை அமைதியா செல்லுமா.. அதுமட்டும் யோசித்துக்கொள்ளுங்கள்.. தேவையில்லாமல் பேசுறாங்க.. சிவபெருமான் எழுதி கொடுத்த பாட்டை நக்கீரர் குறை சொல்வார்.. தருமி கேட்பார்..

பாட்டு எழுதி புகழ் பெறும் புலவர்களும் உண்டு.. பாட்டை குற்றம், குறை சொல்லி புகழ் பெறும் புலவர்களும் உண்டு. என்னையை எதிர்த்து பேசுவதால் உங்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. என்னை எதிர்க்க வேண்டிய தேவை, விமர்சித்து பேசுவதற்கு தேவை உங்களுக்கு இருக்கு. எனக்கு உங்களை எதிர்த்து பேசவேண்டிய, விமர்சித்து பேச தேவை இருக்கா?.. என்னை எதிர்க்கிறவர்கள் எல்லாம் எனக்கு எதிரி கிடையாது.

நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் எதிரி.. அவங்க தான் என் எதிரி.. இனிமேலா பிறந்து எனக்கு எதிரி வரப்போகிறான். நான் தீர்மானித்துவிட்டேன்.. என் எதிரி யார்?… என் இலக்கு எது?… என் பயணம் எவ்வளவு தூரம்?.. இதெல்லாம் வெற்று பேச்சு.. என்னை உங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கும் சிறுமை, எனக்கும் சிறுமை. என் வேலைக்கும் சிறுமை.. அதை விட்டுவிடுங்கள்.. என சீமான் பேசினார்.