ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ஜாலோர் பொதுக்கூட்டத்தில், ‘பனௌடி’ (அதிர்ஷ்டமற்றவர்/கெட்ட சகுனம்) என சிலர் இந்தியில் கூச்சலிட்டனர். இதை சிரித்துக்கொண்டே கவனித்த ராகுல் காந்தி, “நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். நாம்தான் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டமற்றவரால் நாம் தோற்கடிக்கப்பட்டோம்” என்று மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்திருந்தார்.