அதிகாரி வீட்டு வேலைகளுக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்..! பணம் கேட்டு மிரட்டல்..!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயதான தாயை பராமரிக்க ஆள் தேவைப் பட்டுள்ளது. “தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற சூசையம்மாள் என்பவர், வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பி வைப்பது போன்ற பணிகளை செய்யும் “சன் லைட் ஹோம் கேர்”என்ற ‌ நிறுவனத்தில் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த நளினி என்ற பெண்ணை மாதேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மாதேஸ்வரன் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த நளினி, மகேந்திரனுடன் தனிமையில் இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை “சன் லைட் ஹோம் கேர்” நிறுவனத்தின் உரிமையாளர் செல்விக்கு நளினி அனுப்பி உள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை மகேந்திரனுக்கு அனுப்பிய செல்வி, இந்த வீடியோ வெளியே வராமல் இருக்க வேண்டும் எனில் 5 லட்சம் ரூபாய் கேட்டு செல்வி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாதேஸ்வரன் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.பின்னர் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் இதனால் செல்வி தொலைபேசியில் அழைத்தால் அதனை மாதேஸ்வரன் தவிர்த்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதி விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல் ராஜ் மகேந்திரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நளினி, செல்வி மற்றும் விமல்ராஜ் 3 பேரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் 2 பெண்கள் உட்பட3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.