india vs bangladesh: சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் ஆட்ட நாயகன் விருது..!

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகிர் 33, ஷத்மான் இஸ்லாம் 35 மற்றும் ஷகிப் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஜடேஜா 3 மற்றும் பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஐபில்: சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவர்-பிளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் சேர்த்தது.

ராகுல் தியோடியா 7.6 ஓவரில் டு பிளிஸ்சிஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 3 ரன்களில் நடையை காட்டினார். அதனை அடுத்து மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட்வுடன் ஜோடி சேர்ந்தார். ராகுல் தியோடியா 14.3 ஓவரில் மொயின் அலி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு வந்த வேகத்தில் 2 ரன்களில் நடையை காட்டினார். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்வுடன் ஜோடி சேர்ந்தார்.

ஒருமுனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் இருந்த ஜடேஜாவும் தன பங்குக்கு அதிரடியில் இறங்க ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்களும், ஜடேஜா 32 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

190 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 5.2 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 77 ரன்கள் என்ற நிலையில் எவின் லிவிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூரிடம் சரணடைந்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். 19 பந்துகளில் 50 ரன்களை கடந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசிஃப்பிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து களமிறங்கிய சிவம் துபே, சஞ்சு சாம்சன்ஸுடன் ஜோடி சேர்த்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் விழுந்தாலும் அதிரடி மாறவில்லை சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பந்தாடினர்.