இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.
இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.
Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாயர் லாபிட் எக்ஸ் பக்கத்தில், “நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் குறிப்பிடத்தகுந்த கடுமையான விலையைக் கொடுத்த ஆகவேண்டும். இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும். அந்த பதிலடி மிகவும் கடுமையானதாகவும், சிரியா, ஈராக், ஏமன், லெபனான், காசா மற்றும் ஈரானுக்கு தெளிவான ஒரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் இருக்க வேண்டும்” என யாயர் லாபிட் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.