கி.பி முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்பட்டாலும், உணர்த்திகளை பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றி,சூசு Z3 1941 இல் உலகின் முதல் நிரலாக்கக் கணினி செய்து முடிக்கப்பட்டது. அதன் அதீத வளர்ச்சி உலகெங்கும் தகவல் தொழில்நுட்பம் புரட்சியால் இன்று அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.
யாகூ தேடல் தேதி1995 மார்ச் 2 தொடங்கப்பட்டாலும் யாகூ தேடலுக்கு உருவான காலத்தில் கூகுள் கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
இணையதளத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் . தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.
இந்நிலையில், கூகுளின் பிறந்த நாளையொட்டி சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வேலைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.