ICC Under 19 மகளிருக்கான T 20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற ICC Under 19 மகளிர் T 20 உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. அந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி நிக்கி பிரசாத் தலைமையில் விளையாடியது.
A -பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை முதலிய அணிகளும் B -பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, USA முதலிய அணிகளும் C -பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சமோவா முதலிய அணிகளும் D -பிரிவில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நேபாளம் , ஸ்காட்லாந்து முதலிய அணிகளும் பங்குபெற்றனர். A -பிரிவில் நடைபெற்ற லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளை தோற்கடித்து இந்தியா இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் A -பிரிவிற்கு தகுதி பெற்றது. அதேபோல B -பிரிவில் இங்கிலாந்து அயர்லாந்து, USA ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் A -பிரிவிற்கு தகுதி பெற்றது.
மேலும் C -பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் B -பிரிவிற்கு தகுதியும், D -பிரிவில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் B -பிரிவிற்கு தகுதி பெற்றது. இதனைத்தொடர்ந்து சூப்பர் 6 -ல் A -பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை மற்றும் அயர்லாந்து முதலிய அணிகளும் சூப்பர் 6 -ல் B -பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், ஸ்காட்லாந்து மற்றும் நைஜீரியா பங்குபெற்றனர்.
சூப்பர் 6 -ல் A -பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸையும் இலங்கை, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. சூப்பர் 6 -ல் A -பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டுகள் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அதோபோல சூப்பர் 6 -ல் B -பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இத்தனை தொடர்ந்து ஒருபுறம் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வீழ்த்திவீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேற மறுபுறம் அரையிறுதியில் இங்கிலாந்ததை இந்திய அணி 9 விக்கெட் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்து ICC Under 19 மகளிர் உலக கோப்பை மாபெரும் இறுதிப்போட்டி நேற்று இந்திய நேரப்படி மதியம் 12:00 மணிக்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக், சூப்பர் 6, செமி ஃபைனலில் வென்று வந்த தென்னாபிரிக்க அணியை இந்தியா எதிர்கொண்டது.
இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. மேலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக மிக்கே வேன் வூர்ஸ்ட் 23, ஜெம்மா போத்தா 16 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் கொங்காடி திரிசா 3, வைஷ்ணவி சர்மா 2, ஆயுசி சுக்லா 2, பருனிக்கா சிசோடியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்து 83 ரன்கள் எளிய இலக்குடன் கமலினி , கொங்காடி திரிஷா ஆகியோர் களமிறங்கினர். தமிழக வீராங்கனை கமலினி 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுக்க கொங்காடி திரிஷாவுடன் சனிக்கா சால்க் இணைந்தார். கொங்காடி திரிஷாவும் சனிக்கா சால்க்கும் அதிரடியாக விளையாட 11.2 ஓவரில் 84-1 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் கொங்காடி திரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுக்க சனிக்கா சால்க் 22 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
மேலும் 2023-இல் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் இந்தியா ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது இத்தொடரில் 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளுடன் கோப்பையை வென்ற இந்தியா இதையும் சேர்த்து அடுத்தடுத்த கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது. அத்துடன் 2 மகளிர் அண்டர்-19 டி20 உலகக்கோப்பைகளை அதுவும் அடுத்தடுத்து வென்ற முதல் அணியாக இந்தியா மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய திரிஷா ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்