IPL 2025: ஆர்.சி.பி.க்கு யாரு கேப்டனா இருந்தாலும் “கிங் கோலி” சொன்னா கேட்கணும்..!

“விராட் கோலி” ஒரு மன்னன், அவர் ஆலோசகர். கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் தெரிவித்தார். 18-வது IPL 2025 சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த குவின்டன் டி காக்.ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் அஜின்கியா ரஹானே, சுனில் நரைனுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 103 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், அஜின்கியா ரஹானே 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த போது சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அஜின்கியா ரஹானே வெளியேறினார்.

பின்னர் வந்த கொல்கத்தா அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 8.3 ஓவரில் 95 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரராக தேவதூத் பாடிக்கல் விராட் கோலியுடன் இணைந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவதூத் பாடிக்கல் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் மற்றும் விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் இடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் விராட் கோலி சொல்வதை அவ்வப்போது கேட்டு அப்படியே செயல்படுத்தினார். அதாவது, குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு ரஜத் படிதாருக்கு விராட் கோலி ஆலோசனை அளித்தார். அந்த ஆலோசனையை ரஜத் படிதார் அப்படியே கேட்டு பந்து வீச்சாளரிடம் அதை செய்யுமாறு சொன்னார். அதற்கு அடுத்த சில பந்துகளிலேயே குவின்டன் டி காக் ஆட்டம் இழந்தார். அப்போது, வர்ணனையில் பேசிய வீரேந்தர் சேவாக், “விராட் கோலி ஒரு மன்னன், அவர் ஆலோசகர்.

கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும். விராட் கோலி குவின்டன் டி காக்குக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார். அவர் ரஜத் படிதாருக்கு குவின்டன் டி காக் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும், அவரது பலவீனம் என்ன என்பதை பற்றி சொன்னார். அந்தத் தகவலை கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சாளரிடம் சொன்னார். பந்து வீச்சாளர் குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார்” என வீரேந்தர் சேவாக் தெரிவித்தார்.

world cup 2023: டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான்.. வீரேந்திர சேவாக் சொல்படி ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கிய இந்திய அணி..!

2023 உலகக்கோப்பை தொடரின் இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் 9-வது லீக் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி தலைவர் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் ஆடிய குர்பாஸ், ஜத்ரான், ரஹ்மத் ஷா, ஷாகிதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, ஒமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி என அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.

ஆனால் இந்திய அணி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் டெல்லி அருண் ஜேட்லி மைதானம் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழல் பந்து சரிவராது ஆகையால் அவரை நீக்கம் செய்யவும் என தொடர்ந்து வலியுறுத்து வந்தார். அதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பிளேயிங் லெவன், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் ஆவார்.