அடித்து சொல்லும் ஆலன் ஜே லிச்ட்மேன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் இந்திய வம்சாவளி தான்..!

உலகமே அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றித்தான் இன்று விவாதித்து வரும் வேளையில், தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அமெரிக்கத் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் ஆலன் ஜே லிச்ட்மேன் முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் ஆலன் ஜே லிச்ட்மேன், சமீபத்தில் தனது நேர்காணலில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற தனது முந்தைய கணிப்பில் இருந்து மாற்றப் போவதில்லை எனத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது அமெரிக்கரக்கள் மத்தியில் முக்கியம் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஆலன் ஜே லிச்ட்மேன் தனது கணிப்பை செப்டம்பர் 5 -ஆம் தேதி அறிவித்தார், இவருடைய அறிவிப்புக்குப் பின்பு தான் ஏபிசி நியூஸ் விவாதம் நடந்தது. இந்த விவாதம் டிரம்ப்-ன் வெற்றி வாய்ப்புகளைப் பெரிய அளவில் மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலும் ஆலன் ஜே லிச்ட்மேன், “எனது கணிப்பை மாற்ற எதுவும் மாறவில்லை” என்று கூறினார்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நேரலை பேட்டியில் பேசிய போது, இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இந்த ஆர்வம் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை விடவும் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளவதில் தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆலன் ஜே லிச்ட்மேன் 42 ஆண்டுகளாக அதிபர் தேர்தல் குறித்து தனது கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்று பெறுவார் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். அதற்கான சில விஷயங்களையும் முன்வைத்துள்ளார். ஆலன் ஜே லிச்ட்மேனின் கணிப்புகள் வெறும் வாக்குகள் அடிப்படையில் இல்லை, வெள்ளை மாளிகைக்கு மிகவும் முக்கியமான 13 அளவுகோல் அடிப்படையாகக் கொண்டது.

இந்நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் வெறும் மூன்று அளவுகோலில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார். ஆனால் கமலா ஹாரிஸ் 8-ல் முன்னிலை பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கிறார். மேலும் 47 ஆண்டுகளாக தனது கணிப்பின் மாடல் அதிக எண்ணிக்கையில் வெற்றியை மட்டுமே கண்டுள்ளதாகவும் நம்பிக்கையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் தான் வெற்றி பெறுவார் என ஆலன் ஜே லிச்ட்மேன் தெரிவித்துள்ளார்.