கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி கடிதம்: நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்…!

கமலா ஹாரிஸின் உற்சாகமான தேர்தல் பிரச்சாரத்துக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் நம்பிக்கைச் செய்தி பலரை ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், அதிபர் தேர்தலில் உங்களின் உற்சாகமான பிரச்சாரத்துக்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்.

ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தங்களின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன. ஜனநாயக மதிப்பீடுகளுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இனியும் நமது நட்புறவினை வழிநடத்தும்.

துணை அதிபராக மக்களை ஒன்றிணைப்பதற்கும், பொதுவான ஒரு நிலைப்பாட்டினைக் கண்டறிவதற்குமான உங்களின் உறுதி நினைவு கூரப்படும். உங்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என ராகுல் காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்: தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எனது போராட்டம் தோல்வி அடையாது..!

‘‘மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது’’ எனகமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அடைவார் என உலகமே எதிர்பார்த்து இருந்தது. ஆனால், கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

அப்போது, இந்த தேர்தல் முடிவு நாம் விரும்பியது அல்ல. நாம் போராடியது இதற்கு அல்ல. ஆனால், அமெரிக்க ஜனநாயக விதிகளின்படி, இந்த முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். வெற்றி பெற்ற ட்ரம்ப்புக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எனது போராட்டம் தோல்வி அடையாது. நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது. தங்கள் உடல் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் அமெரிக்க பெண்களுக்கு உள்ளது. துப்பாக்கி வன்முறையில் இருந்து நமது பள்ளிகளையும், வீதிகளையும் பாதுகாக்க வேண்டும். நமது உரிமையை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது. தேர்தல் முடிவு குறித்து யாரும் மனம் தளர வேண்டாம். இதில் இருந்து நாம் மீண்டெழுவோம்.

அமெரிக்கா இருண்ட காலகட்டத்துக்குள் நுழைவதாக சிலர் கூறுகின்றனர். வானத்தின் இருளை நட்சத்திரங்கள் நிரப்புவதுபோல, நமது வாழ்க்கையை உண்மை, நம்பிக்கை, சேவை என்ற ஒளிகளால் நிரப்புவோம். சில நேரங்களில் நமது போராட்டம் வெற்றி பெற கூடுதல் காலம் எடுக்கும். அதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் தொடர்ந்து போராடுவதே முக்கியம். போராடுவோம், வெற்றி பெறுவோம். என கமலா ஹாரிஸ் பேசினார்.

கமலா ஹாரிஸ் அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் காஸா மீதான தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்படும்..!

அமெரிக்காவின் 60-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு நாளே மட்டும் எஞ்சி உள்ள இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பும் நேற்று இரவு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

மிச்சிகனில் பிரச்சாரம் செய்ய வந்திருந்த கமலா ஹாரிஸை அவரது ஆதரவாளர்கள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் கமலா ஹாரிஸ் பேசுகையில், காஸா, லெபனான் மீது நடைபெற்று வரும் தாக்குதல்கள் பெரும் கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் காஸா, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமலா ஹாரிஸ் உறுதி அளித்தார்.

அடித்து சொல்லும் ஆலன் ஜே லிச்ட்மேன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் இந்திய வம்சாவளி தான்..!

உலகமே அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றித்தான் இன்று விவாதித்து வரும் வேளையில், தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அமெரிக்கத் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் ஆலன் ஜே லிச்ட்மேன் முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் ஆலன் ஜே லிச்ட்மேன், சமீபத்தில் தனது நேர்காணலில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற தனது முந்தைய கணிப்பில் இருந்து மாற்றப் போவதில்லை எனத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது அமெரிக்கரக்கள் மத்தியில் முக்கியம் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஆலன் ஜே லிச்ட்மேன் தனது கணிப்பை செப்டம்பர் 5 -ஆம் தேதி அறிவித்தார், இவருடைய அறிவிப்புக்குப் பின்பு தான் ஏபிசி நியூஸ் விவாதம் நடந்தது. இந்த விவாதம் டிரம்ப்-ன் வெற்றி வாய்ப்புகளைப் பெரிய அளவில் மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலும் ஆலன் ஜே லிச்ட்மேன், “எனது கணிப்பை மாற்ற எதுவும் மாறவில்லை” என்று கூறினார்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நேரலை பேட்டியில் பேசிய போது, இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இந்த ஆர்வம் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை விடவும் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளவதில் தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆலன் ஜே லிச்ட்மேன் 42 ஆண்டுகளாக அதிபர் தேர்தல் குறித்து தனது கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்று பெறுவார் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். அதற்கான சில விஷயங்களையும் முன்வைத்துள்ளார். ஆலன் ஜே லிச்ட்மேனின் கணிப்புகள் வெறும் வாக்குகள் அடிப்படையில் இல்லை, வெள்ளை மாளிகைக்கு மிகவும் முக்கியமான 13 அளவுகோல் அடிப்படையாகக் கொண்டது.

இந்நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் வெறும் மூன்று அளவுகோலில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார். ஆனால் கமலா ஹாரிஸ் 8-ல் முன்னிலை பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கிறார். மேலும் 47 ஆண்டுகளாக தனது கணிப்பின் மாடல் அதிக எண்ணிக்கையில் வெற்றியை மட்டுமே கண்டுள்ளதாகவும் நம்பிக்கையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் தான் வெற்றி பெறுவார் என ஆலன் ஜே லிச்ட்மேன் தெரிவித்துள்ளார்.

அதிபர் விளாதிமிர் பூட்டின் அதிரடி உத்தரவு: அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யா..!

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அணு ஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி ரஷ்யா அதிபர் விளாதிமிர் பூட்டின் அணுஆயுத பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் உக்ரைன் உள்பட உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருந்த மோதல் என்பது தற்போது போராக மாறி உள்ளது.

ரஷ்யா, உக்ரைன் எல்லை பிரச்சனைக்கு நடுவே ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கிய போர் 3-வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்து தற்போது ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா படைகளை உக்ரைன் சமாளித்து வருகிறது. போரை கைவிட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என ரஷ்யாவுக்கு நம் நாடு உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன.

ஆனால் அதிபர் போரை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருவது விளாதிமிர் பூட்டினுக்கு பிடிக்கவில்லை.

இதற்கிடையே தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் மூலம் ரஷ்யாவுக்குள் அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா கருதுகிறது. தொடக்கம் முதலே அமெரிக்கா உக்ரைனுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை செய்து வருகிறார். அதோடு அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது.

இதற்கு ரஷ்யா தரப்பில் அவ்வப்போது அணு ஆயுதத்தை மையப்படுத்தி விடுவிக்கப்பட்ட மிரட்டலும் முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் அணுஆயுத பயிற்சிகளை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் உக்ரைன் மீதான ரஷ்யா போர் என்பது தற்போது உச்சக்கட்டத்தை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Kim Jong Un: யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வெளியிட்ட வடகொரியா..!

உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வடகொரியா கடும் சவாலாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அணு ஆயுதம்தான். எப்போதெல்லாம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர்ப்பயிற்சி மேற்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வடகொரியா பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை அமெரிக்காவை எச்சரிக்கும்.

அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வரும் நிலையில், எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுப்பார்.

இதற்கிடையே சமீபத்தில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்திருந்தார். இது வழக்கம் போல் கிம் ஜாங் உன்னின் மிரட்டலாக இருக்கும் என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் தற்பாகாப்பிற்கான அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்பதால், யுரேனியம் செறிவூட்டலை வசதிகளை அதிகரிக்க கிம் ஜாங் உடன் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே அந்த இடங்களுக்கு சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2006-ம் ஆண்டு முதன்முறையாக வடகொரிய அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்கு தடைவிதித்தது. அதன்பின் முதன்முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது.

Kamala Harris: டொனால்ட் ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரி..! கமலா ஹாரிஸ் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது..!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்புகள் பலவும் கமலா ஹாரிஸுக்கு சற்றே வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருப்பதாக சுட்டிக் காட்டும் சூழலில் இந்த விவாதத்துக்குப் பின்னர் அதன் போக்கு எப்படி மாறுகிறது என்பது தெரிய வரும். அதனால் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் – டொனால்ட் ட்ரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் ஏற்று நடத்துகிறது. நேரடி ஒளிபரப்பு ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படுகிறது.

‘ஆட்டிப் படைக்கும் வேலைவாய்ப்பின்மை’ விவாதத்தைத் தொடங்கிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ட்ரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் ட்ரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. ஆனால் நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும்.

அமெரிக்காவில், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வீட்டு வசதியை கையடக்க விலைக்குக் கொண்டு வருவேன். குழந்தை வரிக்கடன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். ட்ரம்ப் அதிபரானால் அவர் ட்ரம்ப் சேல்ஸ் டேக்ஸ் கொண்டு வருவார். அதாவது அன்றாடம் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய கமலா ஹாரிஸ் கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் ட்ரம்ப் ஏற்படுத்தி வைத்திருந்த பொருளாதார சீரழிவுகளை பைடன் சரிசெய்துள்ளார். ட்ரம்புக்கு உங்களுக்கான திட்டம் என்று எதுவும் இல்லை. அவர் எப்போதும் அவரை தற்காத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுவார் என்றார்.

இதனை மறுத்த ட்ரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கருக்கலைப்பு உரிமைகள் பற்றி கமலா ஹாரிஸ் பேசுகையில், “ட்ரம்ப் அதிபரானால் தேசம் தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட ட்ரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகிவிடும். அதனால் ட்ரம்ப்பை ஆதரிக்கக்கூடாது.” என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ட்ரம்ப், “சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்தபின்னர் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சி 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது.” என தெரிவித்தார். இதனிடையே குறுக்கிட்ட நெறியாளர் அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்தபின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். “கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள்” என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாகக் கூறிய ட்ரம்ப், அவ்வாறு குடியேறுபவர்கள் ஓஹியோ நகரவாசிகளின் செல்லப் பிராணிகளை வதைத்து உணவாக்கிக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நெறியாளர் குறுக்கிட்டு “அப்படியான செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர் 31-வது மாதமாக நீடித்துவரும் நிலையில் அது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், “எங்களுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. நல்லவேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் அதிபராக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இந்நேரம் புதின் கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இந்திருப்பார். புதின் ஒரு சர்வாதிகாரி. அவர் உங்களை மதிய உணவாக புசித்துவிடுக்கூடும்” என கமலா ஹாரிஸ் எச்சரித்தார்.

அதற்குப் பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் – ரஷ்யப் போரை அவர் தடுக்கத் தவறிவிட்டார்” என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

“இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானார் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகிவிடும்” என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

“ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் பிரச்சினையை திசைதிருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார். அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார்” என கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார்.

 

Kamala Harris: டிரம்ப் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது..! ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்று இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.

கமலா ஹாரிஸ் பேசுகையில் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான்.

அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Donald Trump: கமலா ஹாரிஸ் அதிபரானால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்…!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்று இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில்”கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம்.அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்” என தெரிவித்தார்.

மேலும் “கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட், அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.

நான் வித்தியாசமான ஆள், சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்” என டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடினார்.