Kim Jong Un: யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வெளியிட்ட வடகொரியா..!

உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வடகொரியா கடும் சவாலாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அணு ஆயுதம்தான். எப்போதெல்லாம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர்ப்பயிற்சி மேற்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வடகொரியா பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை அமெரிக்காவை எச்சரிக்கும்.

அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வரும் நிலையில், எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுப்பார்.

இதற்கிடையே சமீபத்தில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்திருந்தார். இது வழக்கம் போல் கிம் ஜாங் உன்னின் மிரட்டலாக இருக்கும் என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் தற்பாகாப்பிற்கான அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்பதால், யுரேனியம் செறிவூட்டலை வசதிகளை அதிகரிக்க கிம் ஜாங் உடன் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே அந்த இடங்களுக்கு சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2006-ம் ஆண்டு முதன்முறையாக வடகொரிய அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்கு தடைவிதித்தது. அதன்பின் முதன்முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது.