சீனா திட்டவட்டம்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எவரையும் நாங்கள் எதிர்ப்போம்..!

சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான டொனால்டு ட்ரம்ப் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஜப்பான் பொருட்களின் மீது 24 சதவீதம், இந்திய பொருட்களின் மீது 27 சதவீதம், சீனா பொருட்களின் மீது 34 சதவீதம், வியட்நாம் பொருட்களின் மீது 46 சதவீதம், வங்கதேசம் பொருட்களின் மீது 37 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களின் மீது 20 சதவீதம், இந்தோனேசியா பொருட்களின் மீது 32 சதவீதம், பாகிஸ்தான் பொருட்களின் மீது 29 சதவீதம் மற்றும் தாய்லாந்து பொருட்களின் மீது 36 சதவீதம் என ஆகமொத்தம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

இந்நிலையில், ‘சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன என்பதே உண்மை.