என்ன கால கொடுமை சார் இது..! டோக்கியோவில் இந்தியா 48-வது இடம்..! பாரிஸில் இந்தியா 71-வது இடம்..!

உலகமே உற்றுநோக்கும் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கிய ஆகஸ்ட் 11- ஆம் தேதி நிறைவடைந்தது. 1900 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் இப்போட்டியை நடத்திய பிரான்ஸ், மூன்றாவது முறையாக, இந்த விளையாட்டு திருவிழாவை அரங்கேற்றுகிறது. இந்த ஒலிம்பிக்ஸ் போட்டி 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரிஸ் நகரம் மட்டுமல்லாது பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர் வீராங்களைகள் பங்கேற்றனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா இதுவரை 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியா சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதலிடமும் 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என சீனா 91 பதக்கங்களுடன்) இரண்டாவது இடமும் பிடித்தது. மேலும் இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.

ஆனால் கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. அப்போது, டோக்கியோ ஒலிம்பிக் 2020-இல், இந்தியா ஒன்று தங்கம் உட்பட ஏழு பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்த நிலையில், இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் அவர்கள் மாரியப்பன் தங்கவேலுவை நேரில் சந்திப்பு

ரியோடி ஜெனிவாவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்தமுறை டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு பாரா ஒலிம்பிக்கில் இத்துடன் சேர்த்து இரண்டாவது பதக்கமாகும்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் அவர்கள் ரியோடி ஜெனிவா மற்றும் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை ஓமலூர், பெரியவடகம்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.