ஐபில்: 115 ரன்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சில் சுருட்டியது

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

டிம் சௌத்தி முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விருத்திமான் சாஹா ரன் ஏதுமில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்யுடன் ஜோடி சேர்த்தார். சிவம் மாவி 3.4 ஓவரில் ஜேசன் ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க்ம், கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார்.

ஷாகிப் அல் ஹசன் 6.5 ஓவரில் கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏழாவது ஓவரிலேயே 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா, ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 10.1 ஓவரில் அபிஷேக் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார்.

ப்ரியம் கார்க்ம் 21 ரன்களுக்கும் அப்துல் சமத் 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, டிம் சௌத்தி மற்றும் சிவம் மாவி தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.