India vs New Zealand: 1955 – 2024 வரை 12 முறை படையெடுத்து 13 -வது முறை இந்தியாயை வீழ்த்திய நியூசிலாந்து..!

1955 – ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து விளையாடி உள்ளது. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2 – 0 என தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தொடரின் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா இருந்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை நியூசிலாந்து பதிவு செய்தது

 

Ind vs Nz Test: வரலாறு படைத்த நியூசிலாந்து..! சொந்த மண்ணில் கோட்டை விட்ட இந்தியா..!

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சரி தொடங்கியா நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் அதிகப்பட்சமாக 86 ரன்களும், கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுக்க இரண்டாவது இன்னிங்கிஸில் நியூசிலாந்து அணி மொத்தமாக 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், ஷுப்மன் கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து.இறுதியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தொடரை கைவிட்டது.

இந்தியா அணிக்கு எதிராக பவுலிங் செய்த நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.