தாலிபான்களின் புதிய சட்டம்: இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. எந்த உதவியும் செய்யக்கூடாது..!

முஸ்லிம் மதத்தை சாராதவர்களிடம் நட்பாக பழக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கொண்டு வந்துள்ள சட்டம் இன்று உலகளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்க படைகள் 2021-ல் வெளியேறிய நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்களான தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானை ஏற்கனவே கடந்த 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். இதையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 3 ஆண்டுகள் ஆகியும் கூட ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த நாடு என்பதால் அங்குள்ள மக்களின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தற்போது ஏராளமான மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். இருப்பினும் கூட இந்த காலக்கட்டத்தில் தாலிபான்கள் தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாதுது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் கவிதைகள் படிக்கவும், பாடல்கள் பாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது. உறவு முறையில் வராத ஆண்களும், பெண்களும் எந்த காரணம் கொண்டும் பார்த்து கொள்ளக்கூடாது.

முஸ்லிம் அல்லாத பெண்கள் முன்பாகவும் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க வேண்டும். தளர்வான அதேவேளையில் நீண்ட உடையை அணிய வேண்டும். வழிபாடுக்கு ஏற்றது போல் போக்குவரத்து நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடையா?

கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றதை அடுத்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.இந்நிலையில் புதிய ஆட்சி அமைத்துள்ள தலீபான்கள் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்து உள்ளனர்.

தற்போது முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலீபான் அமைப்பு முடிதிருத்தும் கலைஞர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.