ICC T 20 World Cup : இந்த படை வெல்லுமா…!? நாளைய சரித்திரம் சொல்லுமா…!?

2007-ம் ஆண்டு முதல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கடைசியாக 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்ற நிலையில் 2018- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரை ஐசிசி கைவிடுவதாக அறிவித்த நிலையில் 2020- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைதத்து மட்டுமின்றி 7-வது T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலின் 3-வது அலை வரலாம் என்ற அச்சத்தால் T 20 உலக கோப்பை கிரிக்கெட் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றது.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்.

2007-ம் ஆண்டு மகேந்திரசிங் தோனி தலைமையில் உலக கோப்பைக்கு வென்ற இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.

ஐபில்: மும்பை இந்தியன்ஸ் அணி இமாலய வெற்றி

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

நாதன் கூல்டர்-நைல் 3.4 ஓவரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், எவின் லிவிஸுடன் ஜோடி சேர்த்தார். எவின் லிவிஸ் 24 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா சரணடைந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் 3 ரன்கள், சிவம் துபே 5 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 4 ரன்கள் என அடுத்தடுத்து நடையை கட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 வது ஓவரிலே 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் தியோடியா சற்று தாக்கு பிடிக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நாதன் கூல்டர்-நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்சர் மற்றும் ஒரு பௌண்டரி அடித்தார். சேத்தன் சகாரியா 3.2 ஓவரில் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் 13 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் விக்கெட்டுயை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார்.

இஷான் கிஷன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடிக்க 25 பந்துகளில் 5 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடித்து 50 ரன்களை கடக்க இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஒவர்களில் 94 ரன்கள் எடுக்க வெற்றி பெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கேட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இமாலய வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்: டெல்லி கேப்பிடல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணியின்தலைவர் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

ஆவேஷ் கானின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 6 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல் 6.2 ஓவரில் குவிண்டன் டி காக் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சௌரப் திவாரி, சசூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல்10. 3 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், சௌரப் திவாரியுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்12. 5 ஓவரில் சௌரப் திவாரி 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட்டுடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 14.1 ஓவரில் கீரான் பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர் .

அடுத்து களமிறங்கிய நாதன் கூல்டர்-நைல், ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். ஆவேஷ் கான் 18. 1 ஓவரில் ஹர்திக் பாண்டியா17 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்தியன்ஸ் அணி 129 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அக்சர் பட்டேல், ஆவேஷ் கான் தல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் மீண்டும் அதிரடியை கையில் எடுத்தபோது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவான் ரன் அவுட் ஆகி வெளியேற அவரை தொடர்ந்து பிரித்வி ஷா 6 ரன்கள் , ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களில் வெளியேற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4.1 ஓவரில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ரிஷப் பண்ட் அவருக்கு குறித்தான பணியில் மீண்டும் அதிரடி கட்டி 26 ரன்களில் ஜெயந்த் யாதவ்விடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 9 ரன்களிலும், ஷிம்ரான் ஹெட்மியர் 15 ரன்களில் வெளியேற கடைசியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.

ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் 9.2 ஓவரில் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். பிரஷித் கிருஷ்ணா 12.1 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் , குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் பிரஷித் கிருஷ்ணா 14.5 ஓவரில் குவிண்டன் டி காக் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லுகி பெர்ஹூசன் 16.2 ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஆனால் லுகி பெர்ஹூசனின் கடைசி ஓவரில் கீரான் பொல்லார்ட்(21), குருனால் பாண்டியா(12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லுகி பெர்ஹூசன், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.