ராகுல் காந்தி வேதனை: எய்ம்ஸ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபாதைகளில் தூங்கும் நோயாளிகள்..!

எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் உறையும் குளிரில் நடைபாதைகளில் தூங்கும் நிலை உள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அண்மைக் காலமாக காய்கறி விற்பனையாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுடன் உரையாடிய வீடியோ பதிவையும் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள சாலைகள், நடைபாதைகள், சுரங்கப்பாதைகளில் படுத்திருந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

பின்னர் இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். உறைய வைக்கும் குளிரில் நடைபாதைகளில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது.

சுரங்கப்பாதைகளில் படுத்து தூங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதுதான் இன்றைய டெல்லி எய்ம்ஸின் உண்மை நிலை. இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறார். மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Daisuke Hori: 12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூக்கம்..!

மனிதன் சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா..!? ஆம், தனது வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் Daisuke Hori கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்களே தூங்குகிறார்.

வடக்கு ஜப்பானில் உள்ள Hyogo மாகாணத்தைச் சேர்ந்த Daisuke Hori தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். நீண்ட நேரத் தூக்கத்தை விட ஆழமான குட்டித் தூக்கம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் உதவும், உதாரணமாக மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் குறைந்த நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக ஊக்கத்துடன் செயல்படுகிறனர் என்று Daisuke Hori தெரிவித்துள்ளார்.

யோமியூரி Yomiuri தொலைக்காட்சி ஹோரியின் அன்றாட செயல்பாடுகளை 3 நாட்களுக்குத் தொடர்ந்து Will You Go With Me? என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது. ஆச்சரியப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 26 நிமிடமே தூங்கிய கோரி அதிக சுறுசுறுப்பாக தனது வேலைகளைச் செய்துள்ளார். உணவு உண்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதும், காப்பி குடிப்பதும் தூக்கக்கலகத்தை நீக்கும் என்று தெரிவிக்கிறார் ஹோரி. கடந்த 2016 முதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார் ஹோரி. இதுவரை 2100 பேரை ultra-short sleepers ஆக ஹோரி தயார் படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.