ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்புடன் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி விளையாடும் நிலையில் 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கிய இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து விச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 79 ரன்கள் இருக்கையில் 10.5 ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 38 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் திவாட்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா, சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்த்தார். 11.5 ஓவரில் நிதிஷ் ரானா 12 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸுடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். அதை அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்த்தார். 15.4 ஓவரில் சுக்மன் கில் 56 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸுடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர ராகுல் திரிபாதி(21) தினேஷ் கார்த்திக் (14) இயன் மோர்கன் (13) என வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் .இழப்பிற்கு 171 ரன்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேர்த்தது.
172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் ஏதுமில்லாமல் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்து வெளியேற அவரை தொடர்ந்து எவின் லிவிஸ் 6 ரன்கள், சஞ்சு சாம்சன்(1) , அனுஜ் ராவத்(0), கிளென் பிலிப்ஸ்(8), சிவம் துபே(18), கிறிஸ் மோரிஸ்(0) என தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேற 9 ஓவர்கள் முடிவில் 35 ரன்களுக்கு 7 விக்கெட்டதடுமாறியது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் படுதோல்வியை தவிர்க்க த்தை ராகுல் திவாட்டியா நிதானமான விளையாடினர். ஆனால் 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டுமொரு அபார வெற்றி பெற்றது.