14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார்.
அவருக்கு பதிலாக ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் அதிரடியை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவு முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்றுள்ளது.
இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிடப்படுள்ளது.