கனமழையால் வெள்ளக்காடான ஸ்பெயின்..! 150-க்கும் மேற்பட்டோர் பலி..!

ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. இதனால் கிழக்கு வலேன்சியா பகுதிகளில், வீதிகளில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. மேலும் திரும்பும் பக்கமெல்லாம் சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து பாய்ந்த காரணத்தால் குடியிருப்பு பகுதிகள் அப்படியே நீரால் சூழ்ந்த பகுதி போல காட்சி அளிக்கின்றன. வீதிகள் மிதக்கும் கல்லறையாக மாறியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஸ்பெயின் ராணுவம் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாக சுமார் 70 பேரை மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை புதன்கிழமை அன்று அணுக முடியாத சூழலை ராணுவம் தற்போது அங்கு வீடு வீடாக மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.