IND vs SA: சச்சின் டெண்டுல்கர் 25 ஆண்டுகள் சாதனையை நாளை ரிஷப் பண்ட் முறியடித்து… தொடரை சமன் செய்வர்..!

இந்தியக் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 16 வயதில் தொடங்கினார். எத்தனையோ நிகழ்த்தியுள்ளார். அவரது ஒரு சில சாதனைகளை விராட் கோலி போன்ற வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.

ரிஷப் பந்த் தனது 16 வயதில் முதல் தர போட்டிகளில் அறிமுகமாகி 2016 -ம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் துணை கேப்டானாக இருந்து 18 பந்துகளில் 50 ரன்கள் சாதனையைப் படைத்தார். மேலும் அதே நாளில் 100 ரன்கள் அடித்து இந்திய அணி அரையிறுதிக்கு அழைத்து சென்றார். ரஞ்சி கிரிக்கெட்டில் இளம் வயதில் முச்சதம், அதிவேக சதம் போன்ற சாதனைகளை படைத்த ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 9 – ந், தேதி டில்லி அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் தோல்வி, ஜூன் 12 – ந் தேதி கட்டாக்கிலுள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்திருத்தத்தால் மீண்டும் ஒரு தோல்வி என 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது .

ஆகையால் ஜூன் 14 – ந், தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் மூன்றாவது முறையாக டாஸ் தோற்க இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலையில் 179 ரன்கள் எடுக்க அதன்பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க 48 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்து போட்டியை 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில் நாளை ராஜ்கோட் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சிக்சர் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது மட்டுமின்றி இந்திய, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி போட்டியை சமன் செய்யும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை என ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் உள்ளனர்.

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்தார். அவர் தனது 25-வது வயதில் படைத்திருந்த சாதனையை, 25 ஆண்டுகளாக யாராலும் தொட முடியாமல் உள்ளது. ஆனால், ரிஷப் பண்ட் 24 வயது 251 நாட்களே ஆன தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 99 சிக்சர்களை விளாசி இருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டன்ஷி அழுத்தம் காரணமாக பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் நாளைய ஆட்டத்தில் அவர் ஒரு சிக்சர் அடித்தால் , சச்சினின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார்.

சச்சின் டெண்டுல்கர் உள்பட வெளிநாடுகளில் ரகசியமாக சொத்துகளைக் குவித்த 91 நாடுகளின் பிரபலங்களின் பெயர்கள் வெளியீடு

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன. வெளியிட்ட அறிக்கையில், பாப் பாடகர் திவா சகிரா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா சிஃபர் ஆகியோர் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சொத்துகளின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துகள், பல நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் வெளிக் கொணர்ந்துள்ளது. மேலும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஜோர்டான் நாட்டின் அரசர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், உக்ரைன் அதிபர், செக் குடியரசின் பிரதமர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதிச் செயல்பாடுகள், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.