india vs bangladesh: டிராவாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியை அபாரமாக வென்ற இந்திய அணி..!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழையால் இரண்டரை நாள் போட்டி பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில்தான் இந்த போட்டி முடிவடையும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்து இருந்தனர். ஆனால் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் t 20 போல அபாரமாக விளையாடி வெற்றியை ருசித்தது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட. 35 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வீச நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி டி20 கிரிக்கெட் அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை அடித்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது முதல் முறையாகும். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட 18.2 ஓவரில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி அதிவேகமாக 150 ரன்களை எட்டி சாதனை படைத்தது.

அதிஷ்ட வசமாக ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க வெளியேற விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இவர்கள் பங்கிற்கு அதிரடியை காட்டினார். இதன்விளைவாக 24.2 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறை என்ற இமாலய சாதனையை நடத்தி காட்டியது.

விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட 30.3 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைத்தது.

இந்நிலையில் இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி ஜாகிர் ஹசன் மற்றும் ஹஸன் மகமுத் விக்கெட்டை இழக்க நான்காம் நாள் ஆட்டம் முடிவில் வங்கதேச அணி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து இருந்தது.

கடைசி நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடங்க அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு பும்ராவும் தன்னுடைய பங்குற்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி 47 ஓவர் முடிவில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கில் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்க 2.1 ஓவரில் 18 ரன்கள் என்ற நிலையில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் இணைந்து விளையாட 4.5 ஓவரில் 34 ரன்கள் என்ற நிலையில் சுப்மன் கில் 8 6 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன், விராட் கோலி இணைய ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.

இதனை தொடர்ந்து 15.6 ஓவரில் 92 ரன்கள் என்ற நிலையில் ஜெய்ஸ்வால் 51 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். விராட் கோலியுடன் இணைத்த ரிஷப் பந்த் கடைசி வரை நின்று விராட் கோலி 29 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 4 ரன்கள் சேர்த்து 17.2 ஓவர் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

india vs bangladesh: சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் ஆட்ட நாயகன் விருது..!

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகிர் 33, ஷத்மான் இஸ்லாம் 35 மற்றும் ஷகிப் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஜடேஜா 3 மற்றும் பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

india vs Bangladesh: ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகிர் 33, ஷத்மான் இஸ்லாம் 35 மற்றும் ஷகிப் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஜடேஜா 3 மற்றும் பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5+ விக்கெட்டுகளை அஸ்வின் 37-வது முறையாகும். இதன் மூலம் ஷேன் வார்னேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்தார்.

ஐ.பி.எல்: 54 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி

துபாய் சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

ஜஸ்பிரித் பும்ரா 1.2 ஓவரில் தேவதூத் படிக்கல் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷ்ரிகர் பரத், விராட் கோலிவுடன் ஜோடி சேர்த்தார். ராகுல் சாஹர் 8.5 ஓவரில் ஷ்ரிகர் பரத் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலிவுடன் ஜோடி சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஷர்துல் தாக்குர் 15.5 ஓவரில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். க்ளென் மேக்ஸ்வெல் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 165 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்கள் நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா மூன்றாவது ஓவரின் கடைசி மூன்று பௌண்டரிகள் விளாசினார். பின்னர் இருவரும் அதிரடி ஆட்டத்தை கைகளில் எடுக்க பவ்ர் பிலே முடிவில் 50 ரன்களை கடந்து 90 % மேல் வெற்றி என மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது.

இந்த ஜோடியை கலைக்க யுஸ்வேந்திர சாஹல் களமிறங்கினர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோலி. ஏழாவது ஓவரின் நான்காவது பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்த குவிண்டன் டி காக் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்த்தார். க்ளென் மேக்ஸ்வெல் 9.6 ஓவரில் ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் யுஸ்வேந்திர சாஹல் 10.3 ஓவரில் இஷான் கிஷன் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பக்கமிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பக்கம் திசை மாறியது. அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை வரிசையாக ஒற்றை இலக்குகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் சுருட்டி அனுப்பினர்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஒவர்களில் 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 166 இலக்கு..! 

துபாய் சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

ஜஸ்பிரித் பும்ரா 1.2 ஓவரில் தேவதூத் படிக்கல் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷ்ரிகர் பரத், விராட் கோலிவுடன் ஜோடி சேர்த்தார். ராகுல் சாஹர் 8.5 ஓவரில் ஷ்ரிகர் பரத் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலிவுடன் ஜோடி சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஷர்துல் தாக்குர் 15.5 ஓவரில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். க்ளென் மேக்ஸ்வெல் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 165 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் 9.2 ஓவரில் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். பிரஷித் கிருஷ்ணா 12.1 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் , குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் பிரஷித் கிருஷ்ணா 14.5 ஓவரில் குவிண்டன் டி காக் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லுகி பெர்ஹூசன் 16.2 ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஆனால் லுகி பெர்ஹூசனின் கடைசி ஓவரில் கீரான் பொல்லார்ட்(21), குருனால் பாண்டியா(12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லுகி பெர்ஹூசன், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். டிரண்ட் போல்ட் முதல் ஓவரில் 15 ரன்கள் மற்றும் ஆடம் மில்னி இரண்டாவது ஓவரில் 15 ரன்கள் என இரண்டு ஓவர்கள் முடிவில் 30 ரன்களை குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஜஸ்பிரித் பும்ரா 2.6 ஓவரில் சுக்மன் கில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்த்தார்.

ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர் ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். ஜஸ்பிரித் பும்ரா 11.4 ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இயன் மோர்கன், ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ஜஸ்பிரித் பும்ரா 14.1 ஓவரில் இயன் மோர்கன் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா, ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார்.

இறுதியில் ராகுல் திரிபாதி 74 ரன்களும், நிதிஷ் ரானா 5 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் 9.2 ஓவரில் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். பிரஷித் கிருஷ்ணா 12.1 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் , குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் பிரஷித் கிருஷ்ணா 14.5 ஓவரில் குவிண்டன் டி காக் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லுகி பெர்ஹூசன் 16.2 ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஆனால் லுகி பெர்ஹூசனின் கடைசி ஓவரில் கீரான் பொல்லார்ட்(21), குருனால் பாண்டியா(12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லுகி பெர்ஹூசன், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.