ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு: ரிக்கி பாண்டிங்கிற்கு ரிஷப் பந்த் மீது பாசம் அதிகம்..! ஆர்சிபியால் ரிஷப் பந்தை வாங்க முடியாது.. !

பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீது பாசம் அதிகம், ஆகையால் பஞ்சாப் அணி ரிஷப் பந்தை அவரை வாங்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் என என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவார் என்பது இன்று மிகப்பெரிய விவாதமாகியுள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் ரிஷப் பந்தின் பிராண்ட் வேல்யூ உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அவரை தங்களது அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஏராளமான அணிகள் தயாராகி வருகின்றன.

ஆனால் ரிஷப் பந்த் குறைந்தபட்சம் ரூ.25 கோடி வரை ஏலத்திற்கு செல்வார் என்று கணிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அணிகளின் பர்ஸ் தொகை குறைவாக இருப்பதால், அவர்களால் ரிஷப் பந்தை வாங்க முடியாது என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அதிக பர்ஸ் தொகை கொண்ட பஞ்சாப், ஆர்சிபி ஆகிய அணிகளால் மட்டுமே ரிஷப் பந்தை வாங்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசுகையில், என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணியின் கைகளுக்கு ரிஷப் பந்த் வருவார் என்று கருதவில்லை. ஏனென்றால் ரிஷப் பந்த் மதிப்பு மிகவும் அதிகம். அனைத்து அணிகளும் அவரை வாங்க நிச்சயம் விரும்புவார்கள்.

ரிஷப் பந்த் வாங்குவதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் செலவு செய்ய முடியும். அவர்களும் தயாராக இருப்பதாக தெரிகிறது. இது என்னுடைய உணர்வு தான். அதேபோல் ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

அதனால் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஆனால் மெகா ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை ஆர்சிபி அணி அவரை வாங்கினால் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆர்சிபி அணியின் கவனம் இம்முறை பவுலர்களை வாங்குவதில் தான் இருக்க வேண்டும் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

சோதனைகளை..! சாதனைகளாக..! மாற்றும் ரிஷப் பந்த்;

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் வரலாறு, ஒருபுறம் வீரேந்தர் சேவாக் மறுபுறம் சௌரவ் கங்குலி இருவரின் விளையாட்டை நினைவூட்டும் வகையில் விளையாடும் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரான இளம் வீரர் ரிஷப் பந்த் இந்திய அணியின் வருகைக்கு பிறகு முடிவிற்கு வந்தது எனலாம்.

இதனால் மகேந்திரசிங் தோனியின் ரசிகர்கள்  ரிஷப் பந்தின் ஆட்டத்தை வெறுத்து, விமர்சனங்களை அடுக்கடுக்காக வைத்தனர். மகேந்திரசிங் தோனி இடத்திற்கு வந்த  ரிஷப் பந்த் சர்வதேச போட்டிற்கு வந்த புதிதில் மகேந்திரசிங் தோனியின் ரசிகர்கள்  கொடுத்த அழுத்தம் காரணமாக ரிஷப் பந்த் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற பலரால் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறி கொடுக்கிறார் என விமர்சிக்கப்பட்டார்.

மேலும் மனம் போன போக்கில் விளையாடும் ரிஷப் பந்திற்கு இந்த விமர்சனங்கள் இன்னும் அழுத்தத்தை கொடுத்தது. இருந்த போதிலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ரிஷப் பந்திற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர். மற்றொரு புறம் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்  பலரும் ரிஷப் பந்திற்கு அறிவுரை கூறினார்.

2017 -ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பன்னாட்டு T 20 போட்டியில் விளையாட இந்திய அணியில்  இடம்பிடித்த ரிஷப் பந்த்  சென்னை சேப்பாக்கம் அரங்கத்தில் பிப்ரவரி 1-ந் தேதி  2017 -ம் ஆண்டு  இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அறிமுகமானார்.

மேலும் ஜூன் 2017 -ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்  பிடித்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி, 2018- ம்  நடைபெற்ற சுதந்திரக் கோப்பை தொடரில் T 20 போட்டிக்கான இந்திய அணியில் பிடித்தார். இதனைத்தொடர்ந்து, ஜூலை 2018 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டு  ஆகஸ்ட் 18 -ந் தேதி அறிமுகமானார். இந்த  அறிமுகப் போட்டியில் 6 கேட்சுகள் பிடித்த  இந்தியர் எனும் சாதனை படைத்தார். மேலும் இதே தொடரில் ரிஷப் பந்த் தனது முதல் சதம் பதிவு செய்து இங்கிலாந்தில் முதல் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்  எனும் சாதனை படைத்தார்.

2018 -ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற  ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதில் ராஜ்கோட் நடைபெற்ற முதலாவது போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதேபோல ஹைதராபாத்தில்  நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் 90 ரன்களுக்கு மேல் அடித்தும் சதத்தை தவறவிட்டார். ஆனால் மகேந்திரசிங் தோனி தன் முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 297 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 346 ரன்கள் எடுத்து மகேந்திரசிங் தோனி சாதனையை முறியடித்தார்.

2018 -ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற  ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு  டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்து  ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் சிட்னி நடைபெற்ற நான்காவது போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். மேலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டோனியை பின்னுக்குத்தள்ளி ரிஷப் பந்த் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் 26-ந் தேதி துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாடியது  முதல் டெஸ்ட் போட்டியில்  ரிஷப் பந்த், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார்.  இதன்மூலம் ரிஷப் பந்த் டெஸ்ட் தொடரில் இதுவரை 93 கேட்ச், 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்து அதிவேகமாக 100 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்துள்ள இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

மேலும் மகேந்திரசிங் தோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டிய நிலையில் 24 வயதான ரிஷப் பந்த், தனது 26 வது டெஸ்ட் போட்டியிலேயே “கீப்பிங்கில் 100 அவுட்” என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை  படைத்து மேலுமொரு சாதனையை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி விளையாடியது. இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. தலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்னுக்குள் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கி இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 102 ரன்னுக்குள் சுருண்டது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள இந்திய அணி சற்றுமுன் வரை 199 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதி இருக்கும் நிலையில், களமிறங்கிய  ரிஷப் பந்த், டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில்அ ரை சதம் அடிக்க இந்திய அளவில் குறைந்த பந்துகளில் 1982-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான  கபில்தேவ் 30 பந்துகளில் அரை சதம் அடிந்திருந்த நிலையில் மிக வேகமாக அரைசதம் அடித்து  கபில்தேவ்வின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்து மேலுமொரு சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி வீரர்கள் களமிறங்கிய இந்திய அணி 98 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஷப் பந்த்- ரவீந்தர் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க 111 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 146 ரன்னில் அவுட் ஆனார். இந்த அதிரடியாக சதம் மூலம் 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்த வீரேந்திர சேவாக்  முதல் இடத்திலும், 1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 பந்தில் சதம் அடித்த முகம்மது அசாருதீன்  2-வது இடத்திலும் உள்ள நிலையில்  தற்போது ரிஷப் பந்த் 89- பந்தில் அதிவேகமாக சதம் அடித்து  3-வது இடத்தை ரிஷப் பந்த் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் சதம், இங்கிலாந்துக்கு  எதிராக எட்ஜ்பாஸ்டன் சதம் என  இரண்டு சதம் அடித்து  24 வயதில் ரிஷப் பந்த் வெளிநாட்டு மண்ணில் இரண்டு சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் மட்டுமே இருக்கின்றார்.  இந்நிலையில், இந்த போட்டியில் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 2000 ரன்களை பதிவு செய்த ரிஷப் பந்த் , இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் எடுத்தது. முதல் இன்னிங்ஸீல் 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழக்க அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், சேதேஷ்வர் புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி  86 பந்துகளை சந்தித்த பண்ட் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்களை குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 1950-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்லைட் வால்காட் 182 ரன்களை அடித்திருந்தார். மேலும்  இதற்கு முன் 1953-ம் ஆண்டு விஜய்  மஞ்சரேக்கர் கிங்ஸ்டனில் ஒரு டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதன்பின்னர் தோனி உட்பட எத்தனையோ சிறந்த விக்கெட் கீப்பர்கள் விளையாடியும், அவரின் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபரூக் இன்ஜினியர் கடந்த 1973ம் ஆண்டு 203 ரன்கள் அடித்து பெற்றிருந்தார். இன்று ரிஷப் பந்த், அதே ரன்களை அடித்து ஃபரூக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ரிஷப் பந்த், T 20, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மற்றும்  முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆதரவுடன் கூடிய விளையாட்டு நுணுக்கங்கள் மட்டுமல்லாது  டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்  ரிக்கி பாண்டிங் அனுபவம்கள், நுணுக்கங்கள் அறிவுரைகளால் நாளுக்கு நாள் செதுக்கப்பட்டு ரிஷப் பந்த் அபார ஆட்டத்தால் பல சாதனைகளை நிகழ்த்தி கொண்டுள்ளார். அதாவது ரிஷப் பந்த் இந்திய அணியில் நுழைந்த போது ஏற்பட்ட சோதனைகளை  இன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டுள்ளார்.