பிரதமர் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை  ரூ.100-ஐ கடந்து விட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. இதற்கிடையே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர்.

இந்நிலையில்  மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில்,  100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும்.  மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு  இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம்: ரபேல் விவகாரம் அலமாரியில் இருந்து ‘நிகழ்வுகள்’ மற்றும் ‘உண்மைகள்’ ஒவ்வொன்றாக ஏன் வெளியேறவேண்டும்?

ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரபேல் விவகாரத்தில் 25-3-2015, 26-3-2015, 8-4-2015, 10-4-2015, 9-11-2015, ஜனவரி 2016, செப்டம்பர் 2016, 28-11-2016 ஆகிய புதிய தேதிகள் வெளிவந்துள்ளன. கண்டிப்பாக பிரதமர், பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை மந்திரி இந்த தேதிகளில் என்ன நிகழ்வுகள் நடந்தது என்பதை கூறவேண்டும்.


எந்த மர்மமும் இல்லை என்றால், முழு விவகாரத்தையும் ஒரே அமர்வில் வெளிப்படையாக ஏன் சொல்லக்கூடாது? அலமாரியில் இருந்து ‘நிகழ்வுகள்’ மற்றும் ‘உண்மைகள்’ ஒவ்வொன்றாக ஏன் வெளியேறவேண்டும்?