என்ன கால கொடுமை சார் இது..! டோக்கியோவில் இந்தியா 48-வது இடம்..! பாரிஸில் இந்தியா 71-வது இடம்..!

உலகமே உற்றுநோக்கும் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கிய ஆகஸ்ட் 11- ஆம் தேதி நிறைவடைந்தது. 1900 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் இப்போட்டியை நடத்திய பிரான்ஸ், மூன்றாவது முறையாக, இந்த விளையாட்டு திருவிழாவை அரங்கேற்றுகிறது. இந்த ஒலிம்பிக்ஸ் போட்டி 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரிஸ் நகரம் மட்டுமல்லாது பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர் வீராங்களைகள் பங்கேற்றனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா இதுவரை 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியா சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதலிடமும் 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என சீனா 91 பதக்கங்களுடன்) இரண்டாவது இடமும் பிடித்தது. மேலும் இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.

ஆனால் கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. அப்போது, டோக்கியோ ஒலிம்பிக் 2020-இல், இந்தியா ஒன்று தங்கம் உட்பட ஏழு பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்த நிலையில், இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக்கில் புதிய வரலாறு எழுதி இந்திய தங்க தாகத்தை தனித்த தங்க மகன் நீரஜ் சோப்ரா

இனி நீரஜ் சோப்ராவால் முன்பு போல தீவிரமாக அதிக வேகத்தில் ஈட்டி எரித்தலில் ஈடுபடுவது சந்தகமே என்று வெளிப்படையாக பேசினர்

ஆரம்பம் படம் பணியில் தனது 12 வது வயதில் உடல் பருமனாக இருந்ததால் கந்த்ராவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாட்லா டாவில் இயங்கி வரும் உடற்பயிற்சி தினமும் சைக்கிளில் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார்


இந்தியாவின் நூற்றாண்டு பதக்க ஏக்கத்தை தகர்த்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்தார்