பழங்குடி பாடல் மூலம் அவையை அதிரவைத்த பெண் MP ஹனா ரவிதி மைபி கிளார்க்..!

நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் MP ஹனா ரவிதி மைபி கிளார்க் தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்து வந்த சபாநாயகர் பின்னர் மவோரி MPக்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் MP களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 21 வயதேயான ஹனா ரவிதி மைபி கிளார்க் ஒருவர். இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் MP ஆனவர் என்ற பெருமையை பெற்றவர்.

1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு டி பாடி மவோரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் பெண் MP ஹனா ரவிதி மைபி கிளார்க் பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப அவருடன் பிற மவோரி MP க்களும் இணைந்து கொண்டனர்.

அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி MP க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஹனா ரவிதி மைபி கிளார்க்கின் முதல் நாடாளுமன்ற உரை அவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. தனது பேச்சினுடே மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி நாடாளுமன்றத்தை அதிர வைத்தார்.

India vs New Zealand: 1955 – 2024 வரை 12 முறை படையெடுத்து 13 -வது முறை இந்தியாயை வீழ்த்திய நியூசிலாந்து..!

1955 – ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து விளையாடி உள்ளது. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2 – 0 என தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தொடரின் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா இருந்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை நியூசிலாந்து பதிவு செய்தது

 

Ind vs Nz Test: வரலாறு படைத்த நியூசிலாந்து..! சொந்த மண்ணில் கோட்டை விட்ட இந்தியா..!

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சரி தொடங்கியா நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் அதிகப்பட்சமாக 86 ரன்களும், கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுக்க இரண்டாவது இன்னிங்கிஸில் நியூசிலாந்து அணி மொத்தமாக 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், ஷுப்மன் கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து.இறுதியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தொடரை கைவிட்டது.

இந்தியா அணிக்கு எதிராக பவுலிங் செய்த நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.