ஐபில்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் வெற்றி இலக்கு

அபுதாபியில் உள்ள சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று என்ற நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அதேபோல ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இவரும் போட்டி தொடக்கம் முதலே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீசசை நாலாபுறமும் சிதறடித்தனர். இதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் அணி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ரஷித் கான் 5.3 ஓவரில் ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 8.3 ஓவரில் ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். உம்ரான் மாலிக் 9.1 ஓவரில் இஷான் கிஷன் 84 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 124 ரன்களுக்கு 3 வது விக்கெட்டுவை பறிகொடுத்தது. அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கீரான் பொல்லார்டுடன் ஜோடி சேர்த்தார்.

அபிஷேக் சர்மா 12.5 ஓவரில் கீரான் பொல்லார்ட் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் ஜேசன் ஹோல்டர் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்கள் எடுத்தது.