டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸை எதிர்த்து போட்டியிட்ட படட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் தனது முதல் உரையில், “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன்.

நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும்.

இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம். இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன். நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

இந்த தருணத்திலிருந்து, அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, ஒரு மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பு நமது குடிமக்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துள்ளது. நமது சமூகத்தின் தூண்கள் உடைந்து முற்றிலும் சிதைந்துவிட்டன. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட நிர்வகிக்க முடியாத ஒரு அரசாங்கம் இப்போது நம்மிடம் உள்ளது. அது நமது அற்புதமான, சட்டத்தை மதிக்கும் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

ஆனால் சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களிலிருந்து வரும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை வழங்கிய, அதே நேரம் அமெரிக்க எல்லைகளை மிக முக்கியமாக, அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க மறுக்கும் ஒரு அரசாங்கம் நம்மிடம் உள்ளது.

எங்கள் போராட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்று இருக்கிறார்கள், உண்மையில், என் உயிரையும் பறிக்க முயன்றிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதில் பாய்ந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன், என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்” என டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸை” எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை வகுத்து, தொடக்க உரை டொனால்ட் ட்ரம்ப்ய நிகழ்த்த உள்ளார்.

இந்த விழாவில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸூகர்பெர்க் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள் அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்தது

அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்ப்க்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி கடிதம்: நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்…!

கமலா ஹாரிஸின் உற்சாகமான தேர்தல் பிரச்சாரத்துக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் நம்பிக்கைச் செய்தி பலரை ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், அதிபர் தேர்தலில் உங்களின் உற்சாகமான பிரச்சாரத்துக்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்.

ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தங்களின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன. ஜனநாயக மதிப்பீடுகளுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இனியும் நமது நட்புறவினை வழிநடத்தும்.

துணை அதிபராக மக்களை ஒன்றிணைப்பதற்கும், பொதுவான ஒரு நிலைப்பாட்டினைக் கண்டறிவதற்குமான உங்களின் உறுதி நினைவு கூரப்படும். உங்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என ராகுல் காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்: தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எனது போராட்டம் தோல்வி அடையாது..!

‘‘மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது’’ எனகமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அடைவார் என உலகமே எதிர்பார்த்து இருந்தது. ஆனால், கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

அப்போது, இந்த தேர்தல் முடிவு நாம் விரும்பியது அல்ல. நாம் போராடியது இதற்கு அல்ல. ஆனால், அமெரிக்க ஜனநாயக விதிகளின்படி, இந்த முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். வெற்றி பெற்ற ட்ரம்ப்புக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எனது போராட்டம் தோல்வி அடையாது. நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது. தங்கள் உடல் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் அமெரிக்க பெண்களுக்கு உள்ளது. துப்பாக்கி வன்முறையில் இருந்து நமது பள்ளிகளையும், வீதிகளையும் பாதுகாக்க வேண்டும். நமது உரிமையை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது. தேர்தல் முடிவு குறித்து யாரும் மனம் தளர வேண்டாம். இதில் இருந்து நாம் மீண்டெழுவோம்.

அமெரிக்கா இருண்ட காலகட்டத்துக்குள் நுழைவதாக சிலர் கூறுகின்றனர். வானத்தின் இருளை நட்சத்திரங்கள் நிரப்புவதுபோல, நமது வாழ்க்கையை உண்மை, நம்பிக்கை, சேவை என்ற ஒளிகளால் நிரப்புவோம். சில நேரங்களில் நமது போராட்டம் வெற்றி பெற கூடுதல் காலம் எடுக்கும். அதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் தொடர்ந்து போராடுவதே முக்கியம். போராடுவோம், வெற்றி பெறுவோம். என கமலா ஹாரிஸ் பேசினார்.

அமெரிக் அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரத்தில் சிறப்புப் பூஜை..!

அமெரிக் அதிபராக இந்திய வம்சாவளி அதாவது தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக் அதிபராக கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆகையால், துளசேந்திரபுரம் கிராமத்தில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற சிறப்புப் பூஜைகள் செய்யபட்டது.

கமலா ஹாரிஸ் அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் காஸா மீதான தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்படும்..!

அமெரிக்காவின் 60-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு நாளே மட்டும் எஞ்சி உள்ள இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பும் நேற்று இரவு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

மிச்சிகனில் பிரச்சாரம் செய்ய வந்திருந்த கமலா ஹாரிஸை அவரது ஆதரவாளர்கள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் கமலா ஹாரிஸ் பேசுகையில், காஸா, லெபனான் மீது நடைபெற்று வரும் தாக்குதல்கள் பெரும் கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் காஸா, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமலா ஹாரிஸ் உறுதி அளித்தார்.

அடித்து சொல்லும் ஆலன் ஜே லிச்ட்மேன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் இந்திய வம்சாவளி தான்..!

உலகமே அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றித்தான் இன்று விவாதித்து வரும் வேளையில், தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அமெரிக்கத் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் ஆலன் ஜே லிச்ட்மேன் முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் ஆலன் ஜே லிச்ட்மேன், சமீபத்தில் தனது நேர்காணலில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற தனது முந்தைய கணிப்பில் இருந்து மாற்றப் போவதில்லை எனத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது அமெரிக்கரக்கள் மத்தியில் முக்கியம் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஆலன் ஜே லிச்ட்மேன் தனது கணிப்பை செப்டம்பர் 5 -ஆம் தேதி அறிவித்தார், இவருடைய அறிவிப்புக்குப் பின்பு தான் ஏபிசி நியூஸ் விவாதம் நடந்தது. இந்த விவாதம் டிரம்ப்-ன் வெற்றி வாய்ப்புகளைப் பெரிய அளவில் மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலும் ஆலன் ஜே லிச்ட்மேன், “எனது கணிப்பை மாற்ற எதுவும் மாறவில்லை” என்று கூறினார்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நேரலை பேட்டியில் பேசிய போது, இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இந்த ஆர்வம் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை விடவும் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளவதில் தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆலன் ஜே லிச்ட்மேன் 42 ஆண்டுகளாக அதிபர் தேர்தல் குறித்து தனது கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்று பெறுவார் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். அதற்கான சில விஷயங்களையும் முன்வைத்துள்ளார். ஆலன் ஜே லிச்ட்மேனின் கணிப்புகள் வெறும் வாக்குகள் அடிப்படையில் இல்லை, வெள்ளை மாளிகைக்கு மிகவும் முக்கியமான 13 அளவுகோல் அடிப்படையாகக் கொண்டது.

இந்நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் வெறும் மூன்று அளவுகோலில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார். ஆனால் கமலா ஹாரிஸ் 8-ல் முன்னிலை பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கிறார். மேலும் 47 ஆண்டுகளாக தனது கணிப்பின் மாடல் அதிக எண்ணிக்கையில் வெற்றியை மட்டுமே கண்டுள்ளதாகவும் நம்பிக்கையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் தான் வெற்றி பெறுவார் என ஆலன் ஜே லிச்ட்மேன் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் விமர்சனம்: அதிபர் பதவிக்கு டோனால்ட் டிரம்ப் தகுதியற்றவர்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பளராக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் நேற்று பேசுகையில், “அமெரிக்க அரசியலமைப்புக்கு விசுவாசமாக செயல்படும் ராணுவத்தை டோனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. சர்வாதிகாரியாக செயல்பட நினைக்கும் டோனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர்” என கமலா ஹாரிஸ் பேசினார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக கொண்டாடும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியா..!?

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று இந்தியன் – அமெரிக்கன் நிதிதிரட்டும் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம்(AAPI), நேற்று அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இரு சிறப்பான மாலைப் பொழுது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு தருணத்தை ஏ.ஆர். ரஹ்மானுடன், உலகத்தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாடுங்கள்” என பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஏதுமிடவில்லை. என்றாலும், நிகழ்ச்சிக்கான பதிவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணைப்பை ஏஏபிஐ வழங்கியுள்ளது.

ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமெரிக்க அதிபருக்கான இந்தத் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரித்தது. மேலும் நாடு முழுவதுமான காங்கிரஸ் மற்றும் பிற அரசு பதவிகளுக்கு போட்டியிடும் ஏஏபிஐ வேட்பாளர்களையும் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

pope francis: “இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்..!”

“டொனால்ட் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோருக்கான கொள்கை, கருக்கலைப்பு உரிமைக்கான கமலா ஹாரிஸின் ஆதரவினை மேற்கோள் காட்டி, இரண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளர்களையும் வாழ்க்கைக்கு எதிரானவர்களாக தான் கருதுவதாக” திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை சுற்றி வளைத்து அவர்களை நாடு கடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். கருக்கலைப்பை பெண்களுக்கான தேசிய உரிமையாக்கிய 1973 -ஆம் ஆண்டு சட்டத்தினை திரும்பும் மீட்டெடுப்பேன் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், தனது 12 நாட்கள் ஆசிய பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், “இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். அவர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தோர்களை நிராகரிப்பவர், மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர்.

நான் ஒரு அமெரிக்கர் இல்லை. நான் அங்கு வாக்களிக்கப் போவதும் இல்லை. ஆனால் ஒன்று தெளிவாக இருக்கட்டும்: இருவரும் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட இருவரையும் ஆதரிப்பது பாவம். அமெரிக்கர்கள் இப்போது, இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

யார் மிகவும் குறைவான தீமை உடையவர்? அந்த பெண்மணியா அல்லது அந்த கனவானா? அது எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனசாட்சிப்படி சிந்தித்து முடிவெடுக்கட்டும்” அவர்களின் இந்த சூளுரையை முன்வைத்து அமெரிக்க அதிபர் தேர்தல் மீது திருத்தந்தை பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.