world cup cricket 2023: தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய நெதர்லாந்து..! 38 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்ற நெதர்லாந்து…

உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் ஆடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்க ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

கடைசி 9.1 ஓவர்கள் 105 ரன்கள் அதிரடியாக அடிக்க நெதர்லாந்து அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் அணி தலைவர் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி ஆடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பவுமா 16 ரன், டிகாக் 20 ரன், அடுத்து களமிறங்கிய வென் டர் டெசன் 4 ரன், மார்க்ரம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து 44 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

இதையடுத்து டேவிட் மில்லர் மற்றும் க்ளாசென் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. நிதானமாக க்ளாசென் 28 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் 9 ரன்கள் என ஆட்டமிழக்க மறுமுனையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி 22 ரன்கள், ககிசோ ரபாடா 9 ரன்கள் எடுக்க போராடிய கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுக்க 42.5 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. இறுதியில் நெதர்லாந்து அணி  38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

இந்திய இளம் அதிரடி வீரர் ரிஷாப் பண்டின் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா…?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று துபாயில் இன்றிரவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டதால் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (533 ரன்கள் ) மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் (546 ரன்கள் ) எடுத்து திருப்திகரமான தொடக்கம் தருகின்றனர்.

ஆனால் மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் பெரும்பாலும் சொதப்பிய விடுகிறது. இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சிலும் அவ்வப்போது தான் நன்றாக செயல்படுகிறார்கள். ஏற்கனவே டெல்லியிடம் லீக்கில் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க இதைவிட கச்சிதமான சந்தர்ப்பம் அமையாது. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்குமா ..?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு தொடரில் எல்லா விதமான மைதானங்களிலும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை (10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளி) வெளிப்படுத்தியுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷிகர் தவான் (544 ரன்), பிரித்வி ஷா (401 ரன்), ரிஷாப் பண்ட் (362 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (6 ஆட்டத்தில் 144 ரன்) பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். அதேபோல பந்து வீச்சில் அவேஷ்கான் (22 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (15 விக்கெட்), அன்ரிச் நோர்டியா, ககிசோ ரபாடா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் கடந்த ஆண்டும் இரண்டு லீக்கிலும் உதை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் இரண்டு லீக்கிலும் உதை வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல்முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. அவர்களது பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கின் திட்டமிட்ட வழிநடத்துதலும் இந்திய இளம் அதிரடி வீரர் ரிஷாப் பண்டின் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா…?

ஐ.பி.எல்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரணடைந்தது

துபாய் சர்வதேச மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர்.
அக்சர் பட்டேல் 2.4 ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 4.4 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி, ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல் 7.4 ஓவரில் மொயீன் அலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்த்தார். ரவிச்சந்திரன் அஷ்வின் 8.3 ஓவரில் ராபின் உத்தப்பா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஓவரில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கொண்டிருக்கையில் மகேந்திர சிங் தோனி, அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆவேஷ் கானின் 19.1 ஓவரில் மகேந்திர சிங் தோனி 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டையும், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி தல 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் மீண்டும் அதிரடியை கையில் எடுத்தபோது பிரித்வி ஷா 18 ரன்கள் எடுத்த நிலையில் 2.3 ஓவரில் தீபக் சாஹரிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர வந்த வேகத்தில் 2 ரன்களுக்கு ஜோஷ் ஹேசில்வுடிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 8.5 ஓவரில் ரிஷப் பண்ட் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரிபால் படேல், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்த்தார். ரிபால் படேல் 18 ரன்கள் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 1 ரன் என வெளியேற மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஷிகர் தவான் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் வந்த ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜோடி சேர்ந்தனர். ஆனால் அக்சர் பட்டேல் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற ககிசோ ரபாடா, ஷிம்ரான் ஹெட்மியருடன் ஜோடி சேர்ந்தனர். கடைசியில் ஷிம்ரான் ஹெட்மியர் 28 ரன்கள் எடுத்த டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.